முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு 365 நாட்களுக்கு தினமும் 1OOO பேருக்கு காலை உணவு வழங்கும் திட்டம்; துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

(
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், = இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில், நேற்று முதல் 2026 பிப்ரவரி 19ஆம் தேதி வரையிலான 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 பேர்களுக்கு, வெவ்வேறு இடங்களில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
“அன்னம் தரும் அமுதக்கரங்கள்” என்ற இந்த திட்டத்தை நேற்று சென்னை கொளத்தூர், அகரம், ஜெகநாதன் சாலையில் உள்ள “முதல்வர் படைப்பகம்” அருகில் முதலமைச்சரின் மனைவி .துர்கா ஸ்டாலின் = தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர். பிரியா ராஜன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றி அழகன், திரு.ஜோசப் சாமூவேல், மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர்கள் .சரிதா மகேஷ்குமார்,.கூ.பீ.ஜெயின், பி.கே.மூர்த்தி, உள்ளாட்சித் பிரதிநிதிகள் ஐசிஎப்.முரளிதரன்,.சந்துரு, மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் .நாகராஜன்,.தாவூத்பீ. யோகபிரியா, ஸ்ரீதணி,. அமுதாசாரதா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
