கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் திறன் பயிற்சி

கல்லூரி மாணவர்களிடம் ஆங்கில பேச்சுத்திறனை வளர்ப்பதற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் புரொஜக்ட் பஞ்ச் திட்டத்தின் மூலம் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 நாட்கள் நடந்த பயிற்சியில் புரொஜ்க்ட் பஞ்ச் சேர்மன் சியாம் ராஜ் தலைமையில் ஆங்கில வள பயிற்றுனர்கள் எஸ்தர், மகிமாரானா, கிருஷ்ண வேணி, பியூலா கிறிஸ்டி, லாவண்யா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பயிற்சி நிறைவு விழாவிற்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம், கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியர் கோகிலா அனைவரையும் வரவேற்றார்.
பயிற்சியில் முதல் 5 இடங்களை பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் கல்கி,மரிய அனுசியா,ராகவின்,வித்யா,மோனிகா ஆகியோருக்கு ரோட்டரி மாவட்ட அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் அருண், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ராஜேந்திரன், முத்து முருகன், ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பிரேமலதா,கற்குவேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியர் பிரின்ஸி ஜெனிட்டா நன்றி கூறினார்.பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
