திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தெய்வானை என்ற பெண் யானை இருந்து வருகிறது. அந்த யானை பக்தர்கள் மற்றும் பாகன்களிடம் அன்பாக பழககூடியது.. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அதன் பாகன்களில் ஒருவரான உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை எதிர்பாராவிதமாக தாக்கியதில் அவர்கள் இருவரும் மரணமடைந்தனர அதனைத் தொடர்ந்து மருத்துவ குழு யானையை பல்வேறு வகையான ஆய்விற்குட்படுத்தியது. ஆய்வில், யானைக்கு எந்த பிரச்சினையும் இல்லை, யானை மீது அதிக பிரியம் கொண்ட சிசுபாலன் எடுத்துக் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் டிசம்பர் மாதம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் […]
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ஹிட்லர்’ எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. தற்போது விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை ‘அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், […]
சேதுபதி, சித்தா’ படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 – வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. […]
மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாநகர் சிவகங்கை சாலை- மேலமடை சந்திப்பில், மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பி.சி. பெருங்காயம் சந்திப்பில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், மேலமடை சந்திப்பு நோக்கி வராமல் மாட்டுத்தாவணி அல்லது விரகனூர் சுற்றுச்சாலை வழியாக மாற்று வழித்தடத்தில் நகருக்குள் செல்லும் வகையில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சோதனை முறையிலும், 26-ந் தேதி முதல் தொடர்ந்தும் போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, […]
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, சர்வம் பைனான்சியல் இன்க்லூசன் டிரஸ்ட் சார்பில் பெண் தொழில் முனைவர்களின் வெற்றி கலந்தாய்வு கூட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு தங்கம் மஹாலில் நடந்தது. இக்கூட்டத்தில் 131 பெண் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர் தகுதிவாய்ந்த 13 பெண் தொழில் முனைவோர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு முதன்மை பொது மேலாளர்ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். உதவி பொது மேலாளர் பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்றார், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் […]
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் அங்குள்ள குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை தொடர்ந்து அங்கு பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அங்கு சமீபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திக் கொலை செய்த சம்பவத்தால் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இந்த கொலையை கண்டித்து கடந்த 16-ந் தேதி மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தலைநகர் […]
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவில்பட்டியில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டபோது கோவில்பட்டி அப்பனேரி ஸ்ரீவெங்கடேஸ்வரா கார்டன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-தமிழக அரசின் மின் கட்டணத்தில் ஒழுங்குமுறை ஆணையம் எடுத்துள்ள முடிவின்படி ஒரே வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ள வீடுகளில் தனித்தனி கட்டணம் கட்டி வந்த நிலையில் அதை ஒரே இணைப்புக்கான பில் தொகையாக மாற்றி எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரே இணைப்பாக கருதி […]
மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ்.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண் என்றாலே ஏதாவது குறை சொல்லும் இந்த சமூகத்தில் அதையும் […]