• October 25, 2026

ஓ.டி.டி யில் டிசம்பர் மாதம் `அமரன்’’ வெளியாகிறது

 ஓ.டி.டி யில் டிசம்பர் மாதம் `அமரன்’’ வெளியாகிறது

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் டிசம்பர் மாதம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அமரன் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலைப் பெற்ற திரைப்படம் இதுதான். மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *