கோவில்பட்டி ராஜீவ் நகர் ஈபி காலனி பிரதான சாலை குறுக்கு தெருவில் கடந்த 3 தினங்களுக்கு மேல் மின் கம்பத்தில் விளக்ககள் எரியவில்லை. சுமார் 20க்கும் மேற்பட்ட விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் ஆனால் இப்பகுதி இருளில் மூழ்கி கிடைக்கிறது. இப்பகுதியினர் கடும் சிரமத்தை அனுபவித்து வருவார்கள். இரவு நேரத்தில் மின்விசிறி இல்லாமல் வெப்பத்தில் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள். எனவே மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்குகளை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக […]
கோவில்பட்டி கல்வி மாவட்டம் குமாரகிரி புதூர் சி. கே. டி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஆர். அனுப்பிரியா,10 ம் வகுப்பு தேர்வில் 500லுக்கு 496 மதிப்பெண் பெற்று பள்ளிக்கூடத்தில் முதல் சாதனை மாணவியாக தேர்ச்சி பெற்று உள்ளார். இவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய படங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.தமிழ் ஆங்கிலம் பாடங்களில் தலா 98 மார்க் பெற்றிருக்கிறார். சாதனை மாணவி அனுப்பிரியா, மாசார்பட்டி ராமமூர்த்தி – சுலோச்சனா தம்பதியரின் மகள் ஆவார். […]
கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில்விளையாட்டு விழா நடைபெற்றது.கல்லூரி நிறுவனங்களின் தலைவர் பி.விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் ஆர். சண்முகம், முதல்வர் டி. ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் உமா சங்கர் ஆண்டு அறிக்கை வாசித்தார். விளையாட்டு விழா நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய ஆக்கி அணி வீரர் அஸ்வின் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஆக்கி கழக செயலாளர் சி குருசித்திர சண்முக பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 6-வது தெருவில் வசித்து வரும் பிரபாகர் என்பவருடைய மகள் ரொவினா எனும் மாணவி கே. ஆர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கொச்சியில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதல் பரிசான தங்கம் வென்றுள்ளார். இவர் தி.மு.க.மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் . மாணவி ரொவினோ 2019 ஆம் ஆண்டு எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது […]
கோவில்பட்டி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று மாலை பலத்த காற்று ,இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது நெல்லையில் இருந்து விருதுநகருக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊரணி பட்டியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்(வயது 55) என்பவர்சென்று கொண்டிருந்தார். மாலை 3:30 மணியளவில் கோவில்பட்டிக்கு முன்னதாக நாலாட்டின்புதூர் பகுதியில் வந்தபோது மழைக்காக சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஒரு மரத்தின் கீழ் ஓரமாக நின்று உள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். […]
கோவில்பட்டியில் அறிவித்தபடி ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? காத்திருப்பு போராட்டம் நடத்தியவரிடம் நகராட்சி ஆணையாளர்
கோவில்பட்டி நகரில் நாள்தோறும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி வருவது மட்டுமின்றி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் கோவில்பட்டி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தது மட்டுமின்றி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையெடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் சமதானக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மே 9 ந்தேதி கோவில்பட்டி நகரில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. […]
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 10ம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 256 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 253 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளியின் தேர்ச்சிசதவீதம் 99% ஆகும். மாணவி அனிதா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும்,மாணவி காவ்யா 490 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவர் லட்சுமணகாந்த் 489 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடமும் பிடித்துள்ளனர் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை நாடார் உறவின்முறை சங்கத் துணைத் தலைவர் செல்வராஜ், செயலர் ஜெயபாலன்,பொருளாளர் சுரேஷ்குமார்,பள்ளிச் […]
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அட்சய திரிதியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. இதனையொட்டி வெற்றி விநாயகர், முத்துமாரியம்மன், சந்தன கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்ரமணிய சுவாமி செய்தார். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல் செயலாளர் மாரிச்சாமி,பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க உப தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நாடார் உறவின் முறை சங்க செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரபிரசாத், பள்ளியின் பொருளாளர் ரத்னராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாககுழு உறுப்பினர்கள் தாழையப்பன்,பால்ராஜ்,மனோகர்,செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இப்பள்ளி 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். […]
தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,94,264 . இதில், 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.016% தேர்ச்சி அதிகரித்துள்ளது. 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகள் 100 […]







