• May 21, 2024

கோவில்பட்டியில் அறிவித்தபடி ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? காத்திருப்பு போராட்டம் நடத்தியவரிடம் நகராட்சி ஆணையாளர் சொன்ன பகீர் தகவல்

 கோவில்பட்டியில் அறிவித்தபடி ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? காத்திருப்பு போராட்டம் நடத்தியவரிடம் நகராட்சி ஆணையாளர் சொன்ன பகீர் தகவல்

கோவில்பட்டி நகரில்  நாள்தோறும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி வருவது மட்டுமின்றி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. 

இதனால் கோவில்பட்டி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தது மட்டுமின்றி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையெடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையில் சமதானக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மே 9 ந்தேதி கோவில்பட்டி நகரில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. 

மேலும் இதற்கான அறிப்புகளும் வெளியிடப்பட்டன. ஆனால் மே 9ந்தேதியான நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனை கண்டித்தும், சமாதானக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5வது அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் கோவில்பட்டி தாலுகா அலுவலக வாயில் முன்பு காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 

போராட்டத்தில் ஈடுபட்ட சங்கரலிங்கத்துடன் போனில் தொடர்பு கொண்ட தாசில்தார்; சரவணப்பெருமாள் சிறிது நேரத்தில் வருவதாக  கூறினார். ஆனால் நீண்ட நேரமாக வரவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேரம் கழித்து வந்த தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட சங்கரலிங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆக்கிரமிப்புகளை அகற்ற சில துறைகள் ஒத்துழைப்பு தரவில்லை என்றும், இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *