• June 8, 2025

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் விளையாட்டு விழா

 கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் விளையாட்டு விழா

 கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில்விளையாட்டு விழா நடைபெற்றது.கல்லூரி நிறுவனங்களின் தலைவர் பி.விஜயன் தலைமை தாங்கினார்.  கல்லூரி இயக்குனர் ஆர். சண்முகம், முதல்வர் டி. ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் உமா சங்கர் ஆண்டு அறிக்கை வாசித்தார்.

 விளையாட்டு விழா நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய ஆக்கி அணி வீரர் அஸ்வின் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஆக்கி கழக செயலாளர் சி குருசித்திர சண்முக பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

 ஆண்கள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தை இரண்டாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவர்யோகேஸ்வரன் பெற்றார்.பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை முதலாம் ஆண்டு மாணவி முத்துச்செல்வி பெற்றார். மாணவர்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை சிகப்பு நிற அணியும்,மாணவிகள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மஞ்சள் அணியும் பெற்றன.

 விழா தொடக்கத்தில் மாணவர் சிலம்பரசன் வரவேற்றார். முடிவில் மாணவி அருணா தேவி நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *