10 ம் வகுப்பு தேர்வு : குமாரகிரி புதூர் சி. கே. டி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி 496 மார்க் வாங்கி சாதனை

கோவில்பட்டி கல்வி மாவட்டம்
குமாரகிரி புதூர் சி. கே. டி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஆர். அனுப்பிரியா,10 ம் வகுப்பு தேர்வில் 500லுக்கு 496 மதிப்பெண் பெற்று பள்ளிக்கூடத்தில் முதல்
சாதனை மாணவியாக தேர்ச்சி பெற்று உள்ளார்.
இவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய படங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.தமிழ் ஆங்கிலம் பாடங்களில் தலா 98 மார்க் பெற்றிருக்கிறார்.
சாதனை மாணவி அனுப்பிரியா, மாசார்பட்டி ராமமூர்த்தி – சுலோச்சனா தம்பதியரின் மகள் ஆவார். மாணவி அனுப்பிரியாவுக்கு பள்ளிக்கூடம் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்
