• May 21, 2024

10 ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம்

 10 ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம்

தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,94,264 . இதில், 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். 

கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.016% தேர்ச்சி அதிகரித்துள்ளது.

10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 4,105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 87.90% அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

பாடவாரியாக தமிழில் 8 பேர் , ஆங்கிலத்தில் 415 பேர் , கணிதத்தில் 20691 பேர், அறிவியலில் 5,104பேர் , சமூக அறிவியலில் 4.,428 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95% அதிகமாக உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

97.02% தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும்,96.36% தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3 ம் இடமும் பிடித்துள்ளது

கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து டாப் 5 பட்டியலில் இடம்பெறுள்ளன

குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 82.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *