• June 6, 2025

Month: April 2024

கோவில்பட்டி

100 சதவீதம் வாக்குப்பதிவு :துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு 

ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 2024 நாடாளுமன்ற மக்களவை  தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திற்குள் இன்று மாலை வட்டாட்சியர் சரவண பெருமாள், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி தொடங்கி வைத்தார். மூன்றாம் பாலினத்தினர்  மற்றும் பேருந்து பயணிகளுக்கும், வாக்களிப்பதின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன் ராஜா தொடர்ந்து துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர். தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நேற்று கோவில்பட்டியில் பிரசாரம் செய்த உதயநிதி இன்று தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அவருடன் திமுக வேட்பாளர் கனிமொழி சென்று இருந்தார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்துக்கு […]

கோவில்பட்டி

நிழல் இல்லா நாள்: கோவில்பட்டி நர்சிங் மாணவிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

நிழல் இல்லா நாள் என்பது அரிய வான் நிகழ்வாகும்.நண்பகலில் சூரியன் நேரடியாக தலைக்கு மேல் இருக்கும் போது வருடத்திற்கு இரண்டு முறை நிகழும் நிகழ்வாகும். 23.5டிகிரி வடக்கு அட்சரேகைக்கும் 23.5டிகிரி தெற்கு அட்சரேகைக்கும் இடைப்பட்ட கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட இடங்களில் நிகழ்கிறது. கோவில்பட்டியில் இன்று 13ம்தேதி நிழல் இல்லா நாளாகும். இந்திராநகர் சொர்ணா  நர்சிங் கல்லூரியில் மாணவிகள் வட்டமாக நின்றும் தரையில் குச்சியை ஊன்றியும் நிழல் இல்லா நாளை சரியாக 12.19 மணிக்கு கண்டறிந்தனர். இதற்கான செயல்விளக்க […]

கோவில்பட்டி

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது

சீனாவில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியாவுக்கு கொண்டு வந்து விற்கப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களினால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. .ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை 20 தீப்பெட்டி விற்பனையை தடை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையெடுத்து கடந்த ஆண்டு ரூ.20க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்த போதிலும் […]

கோவில்பட்டி

கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டியில் உதயநிதி பிரசாரம்

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் அடங்கிய கோவில்பட்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு, திறந்த வேனில் இருந்தபடி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்

செய்திகள்

பாளையங்கோட்டை தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி; 8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து

இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை திருநெல்வேலி வந்தடைந்தார்.  பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசினார்.  அப்போது […]

செய்திகள்

கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதிகள்; தேர்தல் அறிக்கையாக அண்ணாமலை வெளியிட்டார்

கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கோவை பா.ஜ.க. வேட்பாளரும் தமிழக பா.ஜ.க. தலைவருமான அண்ணாமலை வெளியிட்டார். அதில் கோவை தொகுதியில் 500 நாட்களில 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 வாக்குறுதிகளில் சிலவற்றை இங்கு காணலாம் * கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். * ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் * கோவையில் என்.ஐ.ஏ கிளை. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மக்களை குளிர்வித்த மழை

கடந்த 20 நாட்களாக கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயில் கொளுத்தி வந்தது. அதிக பட்சம் 41 டிகிசி செல்சியஸ் வரை வெயில் அளவு பதிவாகியது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி ஓடினாலும் அனல் காற்றே வீசும். ஏர்கண்டிசன் வசதி உள்ளவர்கள் அதை பயன்படுத்தினர். மற்றவர்கள் வெப்பத்தில் சிக்கி தவித்தனர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக […]

தூத்துக்குடி

`நிழல் இல்லா தினம்’ செயல் விளக்க பயிற்சி

தூத்துக்குடி  ஸ்டார் மெட்ரிக் பள்ளியில்  அஸ்ட்ரோ கிளப் சார்பில் `நிழல் இல்லா நாள்’ குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப்ஒருங்கிணைப்பாளர் சம்பத் சாமுவேல் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர்  கலந்து கொண்டு மாணவர்களை வட்ட வடிவில் நிற்க வைத்து வருடத்தில் இருமுறை நிகழும் வானவியல் நிகழ்வான நிழல் இல்லா தினத்தில்  உச்சிபொழுதினை 12.18 மணியளவில் காண பரிசோதனைகளை செய்து காண்பித்தினர். பள்ளி  தலைமை […]

கோவில்பட்டி

`கனிமொழி கீதம்’- கோவில்பட்டி வக்கீல் தயாரித்த ஆடியோ வெளியீடு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் கோவில்பட்டி எம். அழகர்சாமி, `கனிமொழி கீதம்’என்ற பெயரில் தயாரித்து நொச்சி பட்டி திருமூர்த்தி என்பவரை பாட வைத்து பாடல் தாயரித்து இருக்கிறார்,. நடைபெற இருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு கைகொடுக்கும் வகையில் உருவான இந்த பாடல் ஆடியோ கேசட்டை  கனிமொழி எம்.பி.வெளியிட்டார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் கீதா ஜீவன் ஆசியுடன் இந்த ஆடியோ வெளியானது.