• April 29, 2024

கோவில்பட்டி மக்களை குளிர்வித்த மழை

 கோவில்பட்டி மக்களை குளிர்வித்த மழை

கடந்த 20 நாட்களாக கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயில் கொளுத்தி வந்தது. அதிக பட்சம் 41 டிகிசி செல்சியஸ் வரை வெயில் அளவு பதிவாகியது.

வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி ஓடினாலும் அனல் காற்றே வீசும். ஏர்கண்டிசன் வசதி உள்ளவர்கள் அதை பயன்படுத்தினர். மற்றவர்கள் வெப்பத்தில் சிக்கி தவித்தனர்,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (12.4.2024) தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம்,தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.

அதன்படி மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலைமுதல் விட்டு விட்டு மழை பெய்தது. மதிய நேரத்தில் கன மழையும்  பெய்தது.

வெயிலில் சிக்கி தவித்த மக்களுக்கு இந்த மழை ஆறுதலை தந்தது. வெப்பம் குறைந்து 31 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *