• April 30, 2024

கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதிகள்; தேர்தல் அறிக்கையாக அண்ணாமலை வெளியிட்டார்

 கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதிகள்; தேர்தல் அறிக்கையாக அண்ணாமலை வெளியிட்டார்

கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கோவை பா.ஜ.க. வேட்பாளரும் தமிழக பா.ஜ.க. தலைவருமான அண்ணாமலை வெளியிட்டார். அதில் கோவை தொகுதியில் 500 நாட்களில 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 வாக்குறுதிகளில் சிலவற்றை இங்கு காணலாம்

* கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பணிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்

* கோவையில் என்.ஐ.ஏ கிளை. அமைக்கப்படும், காமராஜர் பெயரில் கோவையில் நடமாடும் உணவகங்கள்.

* மத்திய அரசு உதவியுடன் கோவையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 * கோவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும்.

* கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள், முதியோருக்கு மருத்துவ மையம், 3 உணவு வங்கிகள் அமைக்கப்படும்.

*நாடு முழுவதும் உள்ள ஆன்மீகத்தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோவையில் ஐ.ஐ.எம். கொண்டு வர வலியுறுத்துவோம்.

* பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சரவணப்பட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சரவணப்பட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *