கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களா தெரு நகராட்சி தொடக்க பள்ளி மாணவர்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாணவர்கள் சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து நலமுடன் வாழ்வதற்கு நகவெட்டி, சோப்பு, டுத் பிரஷ், சீப்பு, பற்பசை, உள்ளிட்ட சுகாதார பொருட்கள் அடங்கிய சுகாதார பெட்டகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கோவில்பட்டி பங்களா தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா […]
உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று வரும் ஆடிப்பூரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளிலேயே ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் ஆடிப்பூரத்தன்று வைணவ கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது. .சிறப்புமிக்க ஆடிப்பூர வளைகாப்பு விழா கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. வளைகாப்பு விழாவிற்கான வளையல், […]
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையில் நடைபெற்றது. இடைநிலை பிரிவு கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், மாவட்ட தொடக்க கல்விஅலுவலர் சுப்பாராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். . கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 476 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் முனியசாமி, நகர்மன்ற […]
கோவில்பட்டி அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் ஸ்ரீ விக்ன விநாயகர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா செப்டம்பர் 2-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமதத்துடன் விழா தொடங்குகிறது. காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் விக்ன விநாயகருக்கு வருடாபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பகல் 11 மணி முதல் மதியம் 2 மணிவரை மகா அன்னதானம் […]
சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘பிக்பாஸ்’ பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செய்தி தொடர்பாளரும், ‘பிக்பாஸ்’ பிரபலமுமான விக்ரமனும், நானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். அவர் என்னை காதலிப்பதாக சொன்னார். என்னை சட்டரீதியாக திருமணம் செய்துக் கொள்ளும்படி […]
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த வேலம்மாள் பள்ளி மாணவர் ஜெ.பிரபஞ்சன், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 720-க்கு 695 மதிப்பெண்ணும் பெற்று சாதனை படைத்த மாணவி கவுசிகா, சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி பரிசளிக்கும் விழா, மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களின் பதவியேற்பு விழா ஆகிய முப்பெரும் விழா […]
சக்தி பீடங்கள் வரிசையில் 2-ம் இடத்தில் இருக்கும் திரு ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை, முக்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரம், காசி, திருக்காளத்தி, திருவண்ணாமலை வரிசையில் முக்கியமான சிவத்தலமாக இத்தலம் கருதப்படுகிறது. மறுமையில் (அடுத்த பிறவிகளில்) வீடுபேறு அளிக்கும் தலமாக, கங்கைக்கரையில் உள்ள காசி கருதப்படும். வைகைக் கரையில் உள்ள மதுரை, இப்பிறவியிலேயே வீடுபேறு அளிக்கக் கூடியது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மந்திரிணி பீடம், ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், […]
முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்த படம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலாமணி. இவர் குண்டடம்- திருப்பூர் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் டீக்கடையில் சிலர் டீ அருந்தி கொண்டிருந்தனர். காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். லாரி சூரியநல்லூர் […]
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவர் கே. பிரேம்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராமசுப்பு, நவநீதன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி தாலுகா இடைசெவல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகளை நிறுவுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறும் போது, நீர்நிலை ஓடைகள் மூடப்படும். இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை […]







