சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சுமார் 1 1/2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல ஆலோசனைகளை மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுவுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. * அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான பணிகளை ஒருமாதத்தில் தொடங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. * நாடாளுமன்றத்தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்க மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி […]
கோவில்பட்டியில் ஜே.சி.ஐ. கோவில்பட்டி சார்பில் புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு, “Happy Exam” என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஜே.சி.ஐ. கோவில்பட்டி தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார்,பள்ளி தலைவர் டி.ஆண்ட்ரூஸ் சாம்ராஜ் பயிற்சியை தொடக்கி வைத்தார். ஜேசிஐ பயிற்சியாளர் நீதிராஜா மாணவர்களுக்கு பொது தேர்வின் போது துணிவுடன் ஒவ்வொரு தேர்வையும் எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றி பயிற்சியளித்தார். முடிவில் துணை செயலாளர் அருண் பிரசாத் நன்றி கூறினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல் குமார், பி.திலீப் கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக முன்னாள் அமைச்சர்கள் டி,.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் ,மாநில பாச.க/தலைவர் […]
சபாநாயகராக இருந்தபோது முதல் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டேனா? வைத்திலிங்கம் குற்றச்சாட்டுக்கு டி.ஜெயக்குமார் அதிரடி
சென்னையில் அதிமுக தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு. கேள்வி : பா.ஜ.க.விலிருந்து நிர்வாகிகளை அழைத்துவந்து கட்சியை வளர்க்கவேண்டிய நிலை அதிமுகவுக்கு வந்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளாரே பதில் : கல் வீசினால் உடைய அதிமுக கண்ணாடி இல்லை. அதிமுக என்பது கடல். கடலில் கல் வீசினால் கல் தான் காணாமல் போகும். சமுத்திரம் பெரிய அளவிற்கு அங்கேதான் இருக்கும்.அலைகள் […]
சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து வலகியுள்ளனர்.அதன்படி பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த மாவட்ட தலைவர், 2 துணைத் தலைவர்கள், 10 மாவட்ட செயலாளர்கள் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல் குமார், பி.திலீப் கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். விலகிய அனைவரும் அதிமுகவில் இணையப்போவதாக […]
பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணி தர்மத்தினை மீறி செயல்படுவதாக கூறி எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பா.ஜ.க.வினர் 4 பேர் கோவில்பட்டியில் நேற்று எரித்தனர். இந்நிலையில் கடம்பூரில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு […]
கோவில்பட்டியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ஜே.சி.ஐ. மகளிர் அணி சார்பில் “தங்கமங்கை” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது, சவ்சுபாக்யா திருமண மண்டபத்தில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் 500கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஜே.சி.ஐ. மகளிர் அணி, 6 வகையான போட்டிகளை நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்றனர். நேற்று காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி […]
கோவில்பட்டி வட்டார நூலகத்தின் சார்பாக கம்மவார்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று தேசியமகளிர் தினம் மற்றும் நூலக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி தலைமை தாங்கினார் அறிவியல் பட்டதாரி ஆசிரியை ஸ்ரீவித்யா முதுகலை தமிழாசிரியை சுந்தர அம்மாள் முன்னிலை வகித்தனர் உடற்கல்வி ஆசிரியை மகாலட்சுமி அனைவரையும் வரவேற்றார் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 200 மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பு செய்தார் 200 மாணவிகளுக்கான […]
தூத்துக்குடி காமராஜர் கல்லூரி அருகில் உள்ள *மாணிக்கம் மஹாலில்* பா.ஜனதா சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம் வருகிற 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர்.அண்ணாமலை தலைமை தாங்கி பேசுகிறார்/ கோவில் பட்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து சக்தி கேந்திர நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு(ஐ.டி.விங்) செயலாளராக இருந்த திலிப் கண்ணன் பா.ஜ.க.விலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் திலிப் கண்ணன் இன்று அ.தி.முகவில் இணைந்துள்ளார். சென்னை ,கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் அவர் இணைந்தார். மேலும் பா.ஜக வின் ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் அம்மு (எ)ஜோதி, மற்றும் ஐ.டி.விங் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். சமீபத்தில், பாஜக […]