கோவில்பட்டியில் மகளிர்தின கொண்டாட்டம்: ஜோஷ்பின் மெர்சி `தங்க மங்கை’ பட்டம் வென்றார்
கோவில்பட்டியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ஜே.சி.ஐ. மகளிர் அணி சார்பில் “தங்கமங்கை” என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது,
சவ்சுபாக்யா திருமண மண்டபத்தில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் 500கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஜே.சி.ஐ. மகளிர் அணி, 6 வகையான போட்டிகளை நடத்தினர்.
இதில் பங்கேற்ற பெண்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகள் பெற்றனர். நேற்று காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை இந்த போட்டிகள் நடந்தன, விழா மண்டபத்தில் பெண் தொழில் முனைவோர் தங்கள் தாரிப்புகளை விற்பனைக்கு ஸ்டால்கள் அமைத்து வைத்து இருந்தனர்,
போட்டியின் இறுதியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் கேடயங்கள் பரிசளிக்கப்பட்டன. தங்கமங்கை பட்டத்தை மரியா ஜோஷ்பின் மெர்சி வென்றார் தங்க மங்கை மெகா பரிசாக ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது.
,மேலும் ஒவ்வொரு போட்டியின் முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.2500, மூன்றாம் பரிசு ரூ,1500 மதிப்புள்ள பரிசுகள் மற்றும் 18 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஜே.சி.ஐ. கோவில்பட்டி தலைவர் தீபன்ராஜ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ மற்றும் ஜே.சி.ஐ. மண்டல அலுவலர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்..இறுதியில் சித்ரா சூர்யா நன்றி கூறினார்.