பா.ஜ.க.-அ.தி.மு.க. மோதல்:கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்த அக்கட்சியின் மாநில நிர்வாகிகளான சி.டி.ஆர். நிர்மல் குமார், பி.திலீப் கண்ணன் உள்ளிட்டோர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டணி தர்மத்தை மீறியதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் பாஜகவினர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக முன்னாள் அமைச்சர்கள் டி,.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் ,மாநில பாச.க/தலைவர் அண்ணாமலையை கண்டித்து பேட்டி அளித்தனர்,.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று பகலில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்தில் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் ,முன்னாள் அமைச்சர்கள், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுக பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.