கோவில்பட்டி என்.கே.மகாலில் மகிழ்வோர் மன்றம் சார்பில் வருகிற 12-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கான நகைச்சுவை சொல்லும் போட்டி நடைபெறுகீறது.போட்டிகள் 3 பிரிவுகளாக அதாவது எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவர்கள், 1 முதல் 5-ம வகுப்பு வரை, 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்த்தப்படுகிறது.போட்டிக்கான விதிமுறைகள்:
கோவில்பட்டி அருகே கழுகுமலை- சங்கரன்கோவில் மெயின் ரோடு குட்டிபேட்டை எட்டுவீட்டு லைன் பகுதியை சேர்ந்தவர் உமாமகேசுவரன் (வயது 46). கழுகுமலை தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கனகராஜ் (38). கூலி தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவில் மது குடித்து விட்டு, கழுகுமலை குட்டிபேட்டை டாஸ்மாக் பார் அருகில் போதையில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.அப்போது கனகராஜின் கழுத்தில் உமாமகேசுவரன் கடித்ததாக தெரிகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 […]
கோவில்பட்டி இனாம்மணியாச்சி மீனாட்சி நகர் 6-வது தெருவில் குடியிருப்பவர் ராஜாராம் மோகன் ராய் (வயது 63). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலையில் திரும்பினார்.வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அறை கதவுகள், பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த 3 பவுன் தங்க […]
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை கிராமம், நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நேற்று 7 ந்தேதி மாலை 3 மணியளவில் 35.07 அடியாக உயர்ந்துள்ளது.விரைவில் நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் முழுகொள்ளளவை (39.37அடி) எட்டும் வாய்ப்புள்ளது. எனவே நங்காஞ்சியாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து சதுரங்க வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான சதுரங்க போட்டியை காமராஜ் கல்லூரியில் வருகிற 13-ந் தேதி நடத்துகிறது. இதில் ராபிட் எனப்படும் விரைவுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் பங்குபெறலாம்.போட்டிகள் 9 வயதுக்கு உட்பட்டோர், 11 வயதுக்கு உட்பட்டோர், 13 வயதுக்கு உட்பட்டோர், 15 வயதுக்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளாகப் பள்ளி மாணவர், மாணவியருக்கும் மற்றும் பொதுப்பிரிவாக அனைவருக்கும் என 5 […]
காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு ரூ.1000 அபராதம் விதித்த சென்னை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் தேன்ராஜா (வயது 50). இவர் அரசு உதவி பெறும் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக ஒரு கார் பயன்படுத்தி வருகிறார். கடந்த 2-ந் தேதி இரவு 8.57 மணிக்கு அவரது செல்போனுக்கு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் இருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளதஅதில், இவருடைய கார் எண் பதிவிட்டு ஹெல்மெட் அணியவில்லை எனவும், அதற்காக ரூ.1000 அபராதம் விதித்துள்ளதாகவும் வந்துள்ளது. மேலும் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்அளித்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-‘எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தேன்.அப்போது முகநூலில், டி.என். 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதை பார்த்தேன். இதையடுத்து அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, […]
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி அருகே தி.மு.க.சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கினார். அவரது வழியில் புரட்சித்தலைவி அம்மாவும் இந்த இயக்கத்தை தொண்டர்களின் இயக்கமாக யாரும் வெல்ல முடியாத இயக்கமாக வடுவாக வளர்த்தார்.வலிமையான அ.தி.மு.க. என்ற இயக்கத்தை 50 ஆண்டுகளாக வளர்த்து வலிமையான இயக்கமாக இருபெரும் தலைவர்களும் தொண்டர்கள் கையில் தந்துள்ளனர்.அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.கவர்னரை […]
தமிழக சட்டசபையில் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்கோவிலில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோவில் மூலம் ரூ.20 ஆயிரம் செலவில் திருமணம் நடத்தபடுகிறது.இந்த திட்டப்படி திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோவில் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ரூ.2௦ ஆயிரத்துக்கான செலவு விவரம் வருமாறு:-திருமாங்கல்யம் 2 கிராம் தங்கம் -1௦௦௦௦மணமகன் ஆடை-1௦௦௦மணமகள் ஆடை- 2௦௦௦திருமந்திருக்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 பேர்களுக்கு திருமண விருந்து-2௦௦௦பூ […]







