இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி அருகே தி.மு.க.சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தனம், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ்,, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







