அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரெயிலாக மாற்றப்படுகிறது. சென்னை, சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது. இதேபோல, இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக […]
கோவில்பட்டி. யூனியன் சிறப்பு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பழனிச்சாமி, யூனியன் ஆணையர் ராஜேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், யூனியனுக்கு உட்பட்ட 19 வார்டுகளிலும் யூனியன் பொது நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை வசதி, வாறுகால் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது என்று முடிவு செய்யபப்ட்டது. யூனியனிலுள்ள தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை […]
கோவில்பட்டி பூவணநாதசுவாமி கோவிலில் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டு பதவி ஏற்ற அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு தலைமையில் அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அறங்காவலர்கள் சுபாஷ், கை.சண்முகராஜ், பூ.சு.திருப்பதிராஜன், செ.ரவீந்திரன், தி. நிருத்தியலட்சுமி மற்றும் கோவில் செயல் அலுவலர் கி.வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவிலின் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தொல்லியல் துறையின் கருத்துரு பெற்று திருப்பணிகள் செய்யவும், அம்பாள் மற்றும் சுவாமி சன்னதி கொடிமரங்களை தங்க கொடிமரங்களாக மாற்றும் செய்து 2024 […]
சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று மாலை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா பஸ் நிலையம் எதிரே பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி பேசியதாவது:- கோவில்பட்டி மிகப்பெரிய வணிக நகரம். எதிர்காலத்தில் மாவட்டமாக உருவாகும் போது அதன் தலைநகராகவும் கோவில்பட்டி இருக்கப் போகிறது. இவ்வளவு முக்கியமான, மையப்பகுதியில் உள்ள கோவில்பட்டி நகரை […]
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மறவர் காலனி மேட்டு தெருவில் இரு பக்கமும் சாலை மிகவும் குண்டு குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தர வேண்டும், இப்பகுதியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் நூறுநாள் வேலை அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு […]
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் 42,727 மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசின் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை 21,337 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய […]
கோவில்பட்டி – நல்லி ரெயில் நிலையங்கள் இடையே அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் நாளை (26-ந்தேதி)மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே மூத்த பிரிவு பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – நல்லி ரெயில் நிலையங்கள் இடையே அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் நாளை 26.9.2023 ஆம் தேதி இருப்புப்பாதை அவசர பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை […]
கோவில்பட்டியில் தமிழ்நாடு காமராஜர் பேரவை சார்பில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வழக்கறிஞர் ரத்தினராஜா தலைமை தாங்கினார். காளிராஜ், அருண்குமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார் ஆகியோர் இனிப்பு வழங்கினர். கருத்துரிமை […]
கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெரு டாக்டர் காந்திராஜ் ஆஸ்பத்திரி, பத்மபிரபா மருத்துவமனையில் உயர்தர நவீன லேசர் மற்றும் அழகியல் சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ். காந்திராஜ் தலைமை தாங்கினார். டி. கோபால்சாமி முன்னிலை வகித்தார். டாக்டர் பத்ம பிரகாஷ் காந்தி ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் டாக்டர் பால கங்காதர திலகம், ராஜேஸ்வரி காந்திராஜ், டாக்டர் டி.ஜி. நர்மதா தேவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினா். மருத்துவமனை நிர்வாக இயக்குனர் […]
கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவராக தி.நிருத்திய லட்சுமி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். இவர் தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல இணைச் செயலாளா் .ஜெயக்கண்ணனின் சகோதரி ஆவார். தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் சார்பாக தி.நிருத்திய லட்சுமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கம்மநாயுடு மகாஜன சங்க மண்டல செயல் தலைவா் ஆர்.செல்வராஜ் , மண்டல செயலாளா் சி.வேல்ராஜ் , மண்டல பொருளாளர் , பி.கோபாலகிருஷ்ணன் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







