கோவில்பட்டி – நல்லி இடையே லெவல் கிராசிங் கேட் 26 ந் தேதி மூடப்படும்
கோவில்பட்டி – நல்லி ரெயில் நிலையங்கள் இடையே அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் நாளை (26-ந்தேதி)மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே மூத்த பிரிவு பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :-
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – நல்லி ரெயில் நிலையங்கள் இடையே அமைந்துள்ள லெவல் கிராசிங் கேட் நாளை 26.9.2023 ஆம் தேதி இருப்புப்பாதை அவசர பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.







