திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை செயல்பட தொடங்கியது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் தமது அன்றாட பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 8ம் வகுப்பு மாணவர் ஒருவரை , சக மாணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியது. இந்த தாக்குதலை தடுக்க அங்கே இருந்த ஆசிரியர் முயன்றபோது . அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா என்பது கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார மக்களுக்கு மறக்க முடியாத திருவிழா ஆகும். பங்குனி மாத இடையில் தொடங்கி சித்திரையில் தேரோட்டம் கண்டு தீர்த்தம் கொண்டாடி தெப்ப திருவிழாவுடன் நிறைவு பெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவின்போது மக்கள் ஒன்று கூடி தேர் இழுப்பதில் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் களைகட்டும். கோவில் மைதானத்தில் ராட்டினங்களில் ஏறி மகிழும் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமின்றி பெரியவர் களும் அடங்குவர். பல […]
கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் சசீதா, வணிக மேலாண்மை துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .கருத்தரங்கை கல்லூரி முதல்வர் செல்வராஜ் தொடக்கி வைத்தார் திருச்சி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும், 5000 இடங்களில் […]
கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் 44-வது அன்னதானம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பாத்தியப்பட்ட மங்கள விநாயகர் கோவில் முன்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் கமலா தலைமை தாங்கினார். பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.. போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார், கிராம […]
தீ விபத்தில்லா உலகை உருவாக்கிடவும், தீ விபத்தின் போது பணிபுரிந்து உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறவும்,தீயணைப்பு வீரர்களின் சேவையை பாராட்டவும், ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீ தொண்டு நாள் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் நடந்த தீ தொண்டு நாள் நிகழ்விற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரகண்ணன் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கோவில்பட்டி நிலைய அலுவலர் ராஜேந்திரன்,ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் […]
துரைமுருகன் ரத்ததான கழகம் நடத்தும் முதலாம் ஆண்டு ரத்ததான முகாம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. ரத்ததான கழகம் தலைவர் சுதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஜானகிராம், ராஜவேல், முகமது அலி, கார்த்திகேயன், பாலமுகுந்தன்,கார்த்திக் முத்து,சஞ்சய்குமார், தேவிமுனியசாமி, ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை ராஜேந்திரன்,மகேஷ்,காளி,கருப்பசாமி மற்றும் மருத்துவர் துளசி லெட்சுமி தலைமையில் மருத்துவக் குழுவினர் பாலாஜி, கனகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 20க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்
தமிழ் புத்தாண்டு மற்றும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உழைப்பாளி ரஜினி மன்றம் சார்பில் மெயின் ரோடு பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் மகேஷ்பாலா தலைமை தாங்கினார்.உழைப்பாளி ரஜினி மன்றம் தலைவர் இந்துராஜ்,செயலாளர் கதிரேசன்,பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர்கள் குமாராசாமி,முத்துமாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மன்ற உறுப்பினர்கள் வைரமுத்து,கணேசன்,ஐயப்பன்,ஆவுடையப்பன்,மணி,கோவில்பட்டி ரஜினி ரசிகர் மன்ற நகர இணைச்செயலாளர் […]
கோவில்பட்டி வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இன்று பொன்னேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 60 டிராக்டர்கள் கலந்து கொண்டு ஊர் நாட்டாமை தர்மத்துப்பட்டி சாலையில் உள்ள அப்பாசாமி நாயக்கர் புஞ்சையில் ஒன்று கூடி அங்கு நனைய போட்ட பச்சரிசி, கம்பரிசி, மற்றும் நிறை நாழி கம்பு, நெல் மற்றும் நவதானியம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. சூரிய பகவானுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த பூஜையை தச்சர் குமார் ஆசாரி முன் நின்று பாரம்பரிய வழக்காறுகளின்படி நடத்தினார். […]
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள், அந்த வகையில் கோவில்பட்டியில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, சமத்துவ உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனிப் பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று 10-வது நாளான இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. 11 வது திருநாள் நிகழ்ச்சியாக நாளை 15-4-2025 செவ்வாய்கிழமை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கோவிலில் காலை 10 மணியளவில் சுவாமி அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மாலை 6. மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனங்களில் சுவாமி- அம்பாள் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு சொந்தமான அடைக்கலம் காத்தான் மண்டபத்திற்கு வந்து தீபாராதனை […]
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020



