• March 6, 2026

நல்லகண்ணு மறைவு: கோவில்பட்டியில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் 

 நல்லகண்ணு மறைவு: கோவில்பட்டியில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான  நல்லகண்ணு  சென்னையில் நேற்று காலமானார்.இன்று அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாணவர்கள் ஆய்வுக்காக தானமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று மாலை கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நல்லகண்ணுவின் திருஉருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பயணியர் விடுதி முன்பிருந்து அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது. 

ஊர்வலத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஊர்வலம்  மெயின்ரோடு, தெற்கு பஜார், மாதாங்கோவில் ரோடு வழியாக மீண்டும் பயணியர் விடுதி முன்பு முடிவடைந்தது.

 சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மாணிக்கராஜா, திமுக சார்பில் கிழக்கு நகர பொறுப்பாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ஜெயகண்ணன். கல்வியாளர் அணி ரமேஷ்,அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அழகர்சாமி,அன்புராஜ்,

மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், நகரச் செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சரவணன்,மாரிச்சாமி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன்,சிஐடியூ கிருஷ்ணவேணி,காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் அருண்பாண்டியன்,ஐஎன்டியூசி ராஜசேகரன், தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ், நகரச் செயலாளர் நேதாஜி பாலமுருகன்,விசிக நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர பொறுப்பாளர் செந்தில்குமார், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, நகர் மன்ற உறுப்பினர்கள்  மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *