கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Oplus_16908288
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த சீனி முகம்மது நியாஸ் (19) மற்றும் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மேற்படி 2 பேரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.







