• March 6, 2026

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை  குச்சி குடோனில் தீவிபத்து ; தொழிலாளி பலி-2 பேர் காயம்

 கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை  குச்சி குடோனில் தீவிபத்து ; தொழிலாளி பலி-2 பேர் காயம்
பலியான கார்த்திக்

கோவில்பட்டி அருகே மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பாலகணேஷ் மேச் ஒர்க்ஸ் என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை உள்ளது. ஆலையின் ஒரு பகுதியில் குச்சி குடோன் உள்ளது.

இன்று காலை ஆலையில் வழக்கம் போல் வேலை நடந்து கொண்டு இருந்தது. காலை 8 மணி அளவில் ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி வரப்பட குச்சி மூட்டைகளை குடோனில் இறக்கி வைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்,

அப்போது எதிரபாராதவிதமாக தீக்குச்சிகள் உரசிக்கொண்டதில் குடோனில் இருந்த குச்சி மூட்டைகளில் தீப்பிடித்து கொண்டது, இதனால் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. புகை மண்டலமாக அப்பகுதி காட்சி அளித்தது.

தீப்பற்றிய குடோனுக்குள் தொழிலாளர்கள் 3  பேர் சிக்கிகொண்டனர்,. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்,.

இருப்பினும் தீயில் சிக்கி கார்த்திக் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்து போனார்.. 80 சதவீத தீக்காயத்துடன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கபப்ட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிபத்து நடந்த இடத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு  ஜெகநாதன் நேரில் பார்வையிட்டார். சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு நேரில் வந்து சேதம் அடைந்த பகுதியை பார்வையிட்டார். பலத்த காயம் அடைந்த இருவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களை கேட்டுக்கொண்டார்.

தீ விபத்தில் பலியானவர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ்மனைக்கு அனுப்பி வைக்கபட்டது, இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *