சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆக்கி அணிக்கு 52 பேர் தேர்வு
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக சப் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று(பிப்ரவரி 26) ) காலை நடைபெற்றது
மாணவர்கள் பிரிவில் 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர் மாணவிகள் பிரிவில் 75 வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்

காளிமுத்து பாண்டி ராஜா காமராஜ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் மாயாண்டி ஆகியோர் தேர்வு குழு உறுப்பினர்களாக இருந்து வீரர்களை தேர்வு செய்தனர்
மாணவர்கள் பிரிவில் 30 வீரர்களும் மாணவிகள் பிரிவில் 22 வீராங்கனைகளும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இன்று மாலை முதல் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் பயிற்சி முகாம் தொடங்குகிறது \
மாணவர்கள் பிரிவில் முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின் மற்றும் சுரேஷ்குமார் பயிற்சியாளராக செயல்படுகின்றனர் மாணவிகள் பிரிவில் நாடார் மேல்நிலைப்பள்ளி உடற் கல்வி ஆசிரியர் வேல்முருகன் மற்றும் வேல்ஸ் வித்யாலயா பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் ஆகியோர் பயிற்சியாளராக இருக்கிறார்கள்.







