தீயணைப்பு துறை, ராணுவம் வேலைவாய்ப்பு பயிலரங்கம்
கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை மற்றும் சீருடைப் பணியாளர்கள் பயிற்சி முகமை இணைந்து இரண்டு நாள் பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த பயிலரங்கத்தில் கல்லூரியின் இயக்குனர்பி. மகேஷ்குமார் தலைமை உரையாற்றினார்கள். முதல் நாள் நிகழ்வாக தீயணைப்பு துறை களின் வேலைவாய்ப்புகள் பற்றி, தர்ஷன் தீயணைப்பு மற்றும் பயிற்சி கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் மணிகண்டன் சிறப்புரை ஆற்றினார்.

இரண்டாவது நாள் நிகழ்வாக இந்திய ராணுவத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் அந்த பணிகளில் சேர்வதற்கான தகுதிகள் பற்றியும் சங்கரன்கோவில் பி எம் டி கல்லூரியின் தேசிய மாணவர் படை அலுவலர், பி. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.
சொல் விளையாட்டு நிகழ்ச்சி

கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி தமிழ்த்துறை, மாணவர் வாசகர் வட்டம் இணைந்து துறைகளுக்கிடையே சொல் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
சொல் விளையாட்டு போட்டியை கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார். சொல் விளையாட்டில் அனைத்து துறையை சார்ந்த 120 மாணவ, மாணவியர்கள் என்று 60 குழுக்களாக கலந்து கொண்டு பங்கேற்றனர். மொத்தம் சுற்றுகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர் மா.சங்கரேஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் ச.ஜெயகுரும்பன், ந.அசோக்குமார், நூலகர் சு.பாலா ஆகியோர் செய்திருந்தினர்.







