கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் பசுவந்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத் குமார், துணை பொதுச்செயலாளர் சுபத்ரா முருகன், மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் முருகன், மத்திய மாவட்ட செயலாளர், மாவட்ட தேர்தல் இணை கண்காணிப்பாளர் எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ், நிர்வாகி வீரபாண்டி மகேஷ் உள்ளிட்டோர் விளக்க உரையாற்றினார் .

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கௌதமி, வினோத் கண்ணன், மனோஜ் காந்தி, மாவட்டத் துணைச் செயலாளர் சத்யா சுரேஷ், மாவட்ட,நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொருளாளர் செல்வின் சுந்தர் நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தவெக சார்பில் தலைவர் அல்லது பொதுச்செயலாளர் போட்டியிட வேண்டும்.

*தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
* தவெக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் அவற்றை மக்களுக்கு உடனடியாக எடுத்துரைக்க பல்வேறு வழிகளை கையாள வேண்டும்.
* தவெகவின் சின்னத்தை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு செல்ல வேண்டும். *வீட்டுக்கு வீடு விஜய், தமிழ்நாட்டுக்காக விஜய் என்ற முழக்கத்தை மனதில் வைத்து மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜயை முதலமைச்சராக்க முழு உழைப்பை, நேர்மையுடனும், துணிவுடனும் வழங்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







