தேசிய பழுதூக்குதல் போட்டி : தங்கம்,வெள்ளி பதக்கங்கள் வென்ற கோவில்பட்டி வீரர்கள்
உத்தரபிரதேச மாநிலம் மோடிநகரில் நடைபெற்ற தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி 15 நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியில் சீனியர் பிரிவில், முத்துப்பாண்டி ராஜா சிறந்த பளுதூக்குபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜூனியர் பிரிவில், ஆறுமுகபாண்டியன் மகாராஜா சிறந்த பளுதூக்குபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் ருத்ராமயன் செல்வர் என்பவரும் பதக்கங்களை வென்றனர்.
பதக்கம் வென்று பெருமை தேடி தந்த வீரர்கள் அனைவரும் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டிற்காக சிறந்த பளுதூக்குதல் பயிற்சியாளர்களையும் பதக்கங்களை வென்றவர்களையும் கோவில்பட்டி உருவாக்கியுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற ஏ.கே.பாண்டியன், தற்போது இந்திய ரயில்வேயில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற டி. எம். சுந்தரேஸ்வரன் தற்போது இந்திய விளையாட்டு ஆணையம் , (NERC NCOE )இம்பாலில் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார்.

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்றவரும் முன்னாள் இந்திய கடற்படை வீரருமான கே. எஸ். முத்து இந்திய பளுதூக்குதலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.







