நர்சரி, பிரைமரி பள்ளி 33வது ஆண்டு விழா
கோவில்பட்டி விவேக் நர்சரி , பிரைமரி பள்ளி 33வது ஆண்டு விழா சத்தியபாமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பள்ளி மற்றும் ராஜீவ் காந்தி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் காமராஜ் தலைமை தாங்கினார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் பரிசு வழங்கினார்.

பள்ளி நிர்வாகி சுமதி காமராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்,ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா இறுதியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.







