• March 6, 2026

கோவில்பட்டி தொகுதி  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலந்தாய்வு கூட்டம்; 4-ந் தேதி நடக்கிறது

 கோவில்பட்டி தொகுதி  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலந்தாய்வு கூட்டம்; 4-ந் தேதி நடக்கிறது

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை யொட்டி 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு திருச்சி மாநாட்டில்  அறிமுகம் செய்து  வைக்கப்பட்டனர், இவர்களில் 117 பேர் பெண் வேட்பாளர்கள்

கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக வக்கீல் பாண்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். வருகின்ற புதன் கிழமை 4.3.2026 அன்று நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் வக்கீல் பாண்டி  அறிமுக கூட்டம் மற்றும் சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது

, கிழக்கு காவல் நிலையம் அருகில் உள்ள : லட்சுமி திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடக்கிறது

கூட்டத்தின் தொடக்கத்தில் வேட்பாளர் பாண்டி மற்றும்  பொறுப்பாளர்கள் , கட்சி தொண்டர்கள்  அனைவரும் இனாம் மணியாச்சி மேம்பாலம்  அருகில் ஒன்றுகூடி முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக, கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு வருகிறார்கள். வரும் வழியில்  தலைவர்கள் சிலைக்கு ,மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *