மக்காச்சோளம் மற்றும் நவதானியம் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி தமாகா போராட்டம்
கோவில்பட்டி கோட்ட தலைமை அஞ்சலகம் முன்பு தமாகா சார்பில் போராட்டம் நடந்தது. தமாகா தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்
மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, மகளிர் அணி அமுதா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் அய்யாதுரை, விக்னேஷ்ராஜா, மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், தமாகா மாவட்டச் செயலாளர் அழகுசுப்பு, வட்டாரத் தலைவர்கள் பூல்பாண்டியன், முனியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், மணிமாறன், செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் ஊர்வலமாக கோட்ட அஞ்சல் அலுவலகத்துக்கு சென்று, விளைந்த மக்காச்சோள கதிர் மற்றும் கோரிக்கை மனுவை தமிழக முதல்வருக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் வருமாறு :-
*மக்காச்சோளத்துக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
*செயற்கையான முறையில் விலை குறைப்பு ஏற்படுத்தும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள ரூ.2400 விலையின் அடிப்படையில் தமிழக அரசே விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும்.

*நெல்லுக்கு கொள்முதல் நிலையம் அமைத்துள்ளது போல் மக்காச்சோளம் மற்றும் நவதானியம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
*மகளிருக்கு கோடைகால நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கியதைப் போல் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
* மானாவாரி பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.







