வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டி,கோ.வெங்கடசுவாமி கல்லூரியின் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் (அணி எண்: 180), உன்னத் அபியான் திட்டம் மற்றும் கோவில்பட்டி அரிமா சங்கம் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
கோவில்பட்டி அரிமா சங்கத்தின் இயக்குநர் செ.கடம்பூர். செ.ராஜீ எம்.எல்.ஏ தலைமையில் நீதிமன்ற வளாகத்தில், கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளரான ஜெகநாதன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்பேரணி தலைமை அஞ்சல் துறை அலுவலகம் மற்றும் மாதாங்கோவில் தெரு வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு பயணியர் விடுதியில் நிறைவு பெற்றது.
500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வாசகங்களை கோஷமிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கல்லூரி துறைத்தலைவர்கள், உதவிப்பேராசிரியர்கள் மற்றும் அரிமா சங்க தலைவர். எம்.காளிமுத்து, அரிமா சங்க தலைவர்.வழக்கறிஞர். ஜெயஸ்ரீ மற்றும் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் இப்பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்







