வணிகப்பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தி அசத்திய கல்லூரி மாணவ, மாணவிகள்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் மாணவர்கள் தயார் செய்த பொருட்களின் சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இயற்கை உணவு வகைகள்,கைவினைப் பொருட்கள்,மீன் வளர்ப்பு,ஜூஸ் வகைகள்,உள்ளிட்ட பல்வேறு வணிக பொருட்களை 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாங்களாகவே தயார் செய்து சந்தைப் படுத்தி விற்பனை செய்தனர்.

கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் வணிகப் பொருட்களை வாங்கி சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ரோட்ராக்ட் சேர்மன் அருண்,கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வணிகவியல் துறைத் தலைவர் விஜய கோபாலன் வரவேற்றார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிவசுப்பிரமணியம்,
பாலமுருகன்,ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் சந்தைப்படுத்தல் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.
பொருட்களை சந்தை படுத்திய சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கல்லூரி ரோட்ராக்ட் தலைவர் ஹரிகரசுதன், வணிகவியல் துறை பேராசிரியர்கள் பொன்மணி, சுசிலா, வெற்றி செல்வி, பிலோமின் பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறை பேராசிரியர் ஸ்ரீ ராமஜெயா நன்றி கூறினார்.







