இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவுக்கு கடந்த 1-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணுவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பட்டு வந்தது.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
இந்நிலையில் நல்லகண்ணு உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்து வந்தனர். நல்லகண்ணுவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். வெண்டிலேட்டர் உதவியுடன் நல்லகண்ணுவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று பகல் 1:55 மணிக்கு நல்ல கண்ணு உயிர் பிரிந்தது. நல்ல கண்ணுவை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை சார்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
பிப்ரவரி 1ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்ல கண்ணு உடல் நிலையில் ஏற்றத்தாழ்வார் இருந்து வந்தது. பல்துறை மருத்துவ குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தது.
இங்கு அதிகாலை முதல் மருந்துகளை மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்த போதும் முக்கிய உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால் நல்ல கண்ணு 25 2 2026 பிற்பகல் 1.55 மணி அளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.







