செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அவர் இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தில் அவர் இருந்தபோது, கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், அவரது முகம், கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பி சென்று விட்டனர், ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்த அரசு வக்கீல் முத்துக்குமாரசாமியை அருகில் […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் 4 முனைப்போட்டிக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் (25 தொகுதிகள்), ம.தி.மு.க. (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (6), இந்திய கம்யூனிஸ்டு(6), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), மனிதநேய மக்கள் கட்சி (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), […]
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ள மேல களக்குடி என்ற ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் காவியா(வயது 26), எம்.ஏ., பி.எட். படித்துள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வந்த காவியா தற்போது ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தினமும் இவர் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு […]
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுகத்தூர் அருகே ராமநாயினி குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜானகிராமன் (வயது 55). இவரது மனைவி மல்லிகா(50). விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ்(23), ஜீவா (22) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் விகாஷிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஜீவா தந்தைக்கு உதவியாக ஊரிலேயே நர்சரி வைத்து பார்த்து வந்தார். […]
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை நிலவரம் குறித்து அவர் கூறியதாவது;”ஆந்திராவுக்கு செல்லும் என கணிக்கப்பட்ட டிட்வா புயல், சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம். நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாமல்லபுரம் அருகே பேரிடர் மீட்பு குழுவினர் தயார் […]
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற விஜய் கலந்து கொண்ட த.வெ.க. பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுவரை போலீசார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி […]
நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் கீழூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயது பட்டதாரி பெண். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். அந்த பெண்ணின் தந்தைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த பிரபாகரன் (37) என்பவர் அறிமுகமானார். அவர் ‘நான் உங்கள் மகளுக்கு ரயில்வேயில் வேலை செய்து வருகிறேன். எனக்கு உயர் அதிகாரிகள் பலரை தெரியும். ரூ.25 லட்சம் கொடுத்தால் வேலை நிச்சயம்” என்று ஆசைவார்த்தை கூறினார்,.’ […]
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை, ‘மக்கள் மாளிகை தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- காலனித்துவப் பெயரிடலில் இருந்து விலகிச் சென்று, மக்களை மையப்படுத்தப்பட்ட ஜனநாயகத்தின் விழுமியங்களை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் “மக்கள் மாளிகை” என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, “ராஜ்பவன், […]
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும், சென்னை,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதேபோல, காலையில் பள்ளி மற்றும்கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள், வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது மழையால் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். இதனிடையே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் […]
குளிர் கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, இந்த குளிர் கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







