எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுக் குழு முடிவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால், அந்தப் பொதுக் குழுவில் புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து பதவிகளும் செல்லாது என்ற நிலை உருவாகி உள்ளது.நீதிமன்றத்தின் தீர்ப்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் […]
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி நடந்தது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.அப்போது தி.மு.க.-பா.ஜனதாவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அஞ்சலி செலுத்தி விட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பா.ஜ.க.வினர் தாக்குதல் நடத்தி […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் எபின் (வயது 36). இவர் தாராபுரத்தில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்றி ஒற்றுமையை வகைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி ஆசிரியர் தேசிய கொடியில் இயேசுவே இந்தியாவை ஆசீர்வதியும் […]
எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது ; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தையில் உழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- […]
புலி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடி மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது. அதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.மேலும் வழக்கு தொடர்பாக செப்டம்பர் 16ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு […]
1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது- ஐகோர்ட்டு தடையை அமல்படுத்த பள்ளிகல்வித்துறை உத்தரவு
1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவல்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆய்வுக்கு பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் “1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்முடி கூறியதாவது:-மாணவர்கள் http://tneaonline.org இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்துகொள்ளலாம் .வரும் 20 முதல் 23-ம் தேதி வரை 7.5% இட ஒதுக்கீட்டுப் பிரிவு, சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் […]
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகளின் சார்பில் நடைபெற்ற சுதந்திர விழாவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- டிடிவி தினகரன் அ.தி.மு.க.வில் குறித்து பொதுக்குழுவில் எதுவும் பேசவில்லை என்றும் ஒருங்கிணைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளாரே. பதில்;- புரட்சித்தலைவரின் சின்னம் இரட்டை இலை. இதற்கு ஒரு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அந்த […]
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் கடந்த1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளர் கனல் கண்ணன் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரின் கோவிலில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் சாமிதரிசனம் செய்கின்றனர். ஆனால், கோவிலுக்கு எதிரே கடவுளே இல்லை என்று கூறியவரின் சிலை (பெரியார் சிலை) என்று உடைக்கப்படுகிறதோ அன்று […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







