விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் பயன்படுத்தும் அரசு காரின் டிரைவராக இருந்தவர் பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி நேற்று அலுவலகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.பின்னர் அவர் வீட்டுக்கு கிளம்பினார். தினமும் தன்னை வீட்டில் இருந்து அழைத்து வந்த டிரைவர் இன்று பணி ஓய்வு பெற்று செல்லும்போது அவரை கவுரவிக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நடவடிக்கை மேற்கொண்டார்வழக்கமாக தான் அமர்ந்து வரும் முன் இருக்கையில் அந்த டிரைவரை அமரவைத்து டிரைவர் இருக்கையில் கல்வி […]
எட்டயபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றி முட்செடிகளை அகற்றி மரங்கள் வளர்க்க ஏற்பாடு
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை சுற்றிலும் முட்செடிகள் வளார்ந்து காடு போல் தோற்றமளிக்கிறது. இதனால் பாம்பு நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக மாணவிகள் பயத்துடன் இருந்து வருகிறார்கள்இந்த நிலையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள குறுங்காடுகள் திட்டத்தின் கீழ்எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக்கல்லூரியை சுற்றிலும் வளர்ந்துள்ள களைகளை அகற்றி மரங்கள் நடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. விளாத்திகுளம் சட்டமன்ற […]
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்கு தெருவை சோ்ந்த உப்பள தொழிலாளி சண்முகராஜ் (வயது 45) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.ஆவரையூா் அருகே தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோட்டில் பைக்கில் சென்றபோது, சிலர் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.’சண்முகராஜ் மனைவி முத்துசந்தானம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனா். இந்நிலையில் சண்முகராஜ் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ,மேலும் ரூ. 5 லட்சம் நிவாரண உதவி […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் மயிலேறி (வயது 40). முத்தையாபுரத்தில் உள்ள டாஸ்மார்க் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் கணவரை இழந்த மகராசி (33) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், மயிலேறி – மகராசி இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த […]
கோவில்பட்டி நடராஜபுரம் ஓடை தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகத்தாய் இவரது மகன்கள் செல்லத்துரை(வயது 26), முத்துச்செல்வம்(19), இருவரும் கட்டுமான பணியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் செல்லத்துரைக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடிப்பது வழக்கம். நேற்று இரவு செல்லத்துரை தனது தாயிடம் மதுபோதையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அவரது தம்பி முத்துச்செல்வம் தட்டிக்கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு உண்டானது.இதில் முத்துச்செல்வம் கடுமையாக தாக்கியதில் அண்ணன் செல்லத்துரை […]
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.அதே சமயம் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், மருந்து மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.அப்போது இலங்கைக்கு கடன் உதவித் […]
கோவில்பட்டியை சேர்ந்தவர் பழைய பஸ் நிலையம் அருகே ஆஸ்பத்திரி நடத்தி வருபவர் டாக்டர் முரளி (வயது 58). இவருடைய ஆஸ்பத்திரியில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 25 வயது பெண் சில நாட்களுக்கு முன்பு நர்சு வேலைக்கு சேர்ந்தார்.சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பார்க்க சென்ற ஒவ்வொரு வார்டாக சென்ற டாக்டர் முரளியுடன் அந்த நர்சும் சென்றார். அப்போது அந்த நர்சுக்கு டாக்டர் முரளி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறதுஇதனால் மனமுடைந்த அந்த நர்சு வீட்டிற்கு சென்றதும் தூக்க மாத்திரை […]
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு ஆல்பர்ட் அன் கோ ஜங்ஷன் பகுதியில் எஸ்.எஸ் மூர்த்தி தெருவை சேர்ந்த பிரபு (வயது 41) என்பவர் கடந்த 6.5.2022 அன்று அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.முன்விரோதம் காரணமாக மேல சண்முக புரத்தைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் சூப்பி (எ) செல்வசதீஷ் (23), வண்ணார் தெருவை சேர்ந்த சரவணன் மகன் ஜெயக்குமார் (எ) எலும்பு அருண் (19), தாமோதர நகரை சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (எ) சொரி (21), சத்யா நகரை […]
திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, திண்டுக்கல் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளியில் இறுதித் தேர்வு எழுதி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினார். திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே மாணவி வந்தபோது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், வாக்குவாதம் செய்திருக்கிறார். வாக்குவாதம் முற்றியபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்திவிட்டு […]
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் , நரேந்திர மோடியின் செயல்பாடுகளைப் பற்றி விமர்சிக்கும்போது, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால், தன்னுடைய நடிப்புத் திறமைக்காகப் பெற்ற செவாலியே உள்ளிட்ட விருதுகளை, பிரதமர் மோடிக்கு கொடுக்கச் சொல்லியிருப்பார் என்று கிண்டலாக கூறியிருக்கிறார். இப்படி ஒப்பிட்டுப் பேசியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திரையுலகில் மட்டுமல்ல, பொதுவாழ்விலும் யாருடனும் ஒப்பிட முடியாதவர் […]







