ஓய்வு பெற்ற டிரைவரை, அமரவைத்து அவரது வீடு வரை காரை ஓட்டி சென்ற பெண் கல்வி அதிகாரி
![ஓய்வு பெற்ற டிரைவரை, அமரவைத்து அவரது வீடு வரை காரை ஓட்டி சென்ற பெண் கல்வி அதிகாரி](https://tn96news.com/wp-content/uploads/2022/06/b464327e-2388-4528-993f-496e3a16ab80-718x560.jpg)
விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் பயன்படுத்தும் அரசு காரின் டிரைவராக இருந்தவர் பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி நேற்று அலுவலகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது.
பின்னர் அவர் வீட்டுக்கு கிளம்பினார். தினமும் தன்னை வீட்டில் இருந்து அழைத்து வந்த டிரைவர் இன்று பணி ஓய்வு பெற்று செல்லும்போது அவரை கவுரவிக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நடவடிக்கை மேற்கொண்டார்
வழக்கமாக தான் அமர்ந்து வரும் முன் இருக்கையில் அந்த டிரைவரை அமரவைத்து டிரைவர் இருக்கையில் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஏறி அமர்ந்தார். இதை பார்த்ததும் அந்த டிரைவர் மகிழ்ச்சியில் அனந்த கண்ணீர் வடித்தார். அலுவலக ஊழியர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஓய்வு பெற்ற டிரைவரை காரில் அமர வைத்து காரை அவரின் வீடு வரை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஓட்டிசென்றார். இதை முன்கூட்டியே அறிந்துகொண்ட டிரைவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டு வாசலில் கூடி இருந்தனர்.
அவர்கள் கல்வி அலுவலர் ஓட்டி வந்த கார் வீடு வந்து சேர்ந்ததும், ஓய்வு பெற்ற டிரைவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காரில் அவரை அமரவைத்து ஓட்டி வந்து கவுரப்படுத்திய கிருஷ்ணகுமாரியை பெரிதும் பாராட்டினார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)