எட்டயபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றி முட்செடிகளை அகற்றி மரங்கள் வளர்க்க ஏற்பாடு

 எட்டயபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியை சுற்றி முட்செடிகளை அகற்றி மரங்கள் வளர்க்க ஏற்பாடு

கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை சுற்றிலும் முட்செடிகள் வளார்ந்து காடு போல் தோற்றமளிக்கிறது. இதனால் பாம்பு நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாக மாணவிகள் பயத்துடன் இருந்து வருகிறார்கள்
இந்த நிலையில் முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள குறுங்காடுகள் திட்டத்தின் கீழ்எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக்
கல்லூரியை சுற்றிலும் வளர்ந்துள்ள களைகளை அகற்றி மரங்கள் நடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் இந்த் பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். கல்லூரியின் முதல்வர் பேபிலதா, தொழில்நுட்ப கல்வி பிரிவு உதவி செயற்பொறியாளர் துரைசிங்கம் உதவி செயற்பொறியாளர் நாகேஸ்வரி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *