கொலை செய்யப்பட்ட உப்பள தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி

 கொலை செய்யப்பட்ட உப்பள தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்கு தெருவை சோ்ந்த உப்பள தொழிலாளி சண்முகராஜ் (வயது 45) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஆவரையூா் அருகே தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோட்டில் பைக்கில் சென்றபோது, சிலர் வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.’
சண்முகராஜ் மனைவி முத்துசந்தானம். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் சண்முகராஜ் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ,மேலும் ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.
அப்போது தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரி ஷங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய சேர்மன் ஜனகர், பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், கவுன்சிலர் கேசவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *