கள்ளக்காதல் ஜோடி, விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வெள்ளாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் மயிலேறி (வயது 40). முத்தையாபுரத்தில் உள்ள டாஸ்மார்க் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் கணவரை இழந்த மகராசி (33) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மயிலேறி – மகராசி இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையறிந்த உறவினர்கள் அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி எங்கோ சென்று விட்டனர்.
இதுகுறித்து மயிலேறியின் மனைவி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று வெள்ளாரம் ஊருக்கு அருகே காட்டுப் பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் அங்கு சென்றனர்.
விசாரணையில் காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தது மயிலேறி-மகராசி என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கிறார்கள். இறந்து கிடந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மயிலேறி எழுதியுள்ள கடிதம் சிக்கியது. அதில் “எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என எழுதி இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.