கோவில்பட்டி அருகே படர்ந்தபுளியில் மாநில கைப்பந்து போட்டி; 4,5- ந் தேதிகளில் நடக்கிறது
கோவில்பட்டி எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தில் லியா கைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கனரா வங்கி சுழற்கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. போட்டி 4-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
ஆண்கள் அணிக்கு முதல்பரிசாக ரூ.17.017, இரண்டாம் பரிசாக ரூ. 13,017, மூன்றாம் பரிசாக ரூ.9017, நான்காம் பரிசாக ரூ. 6017 வழங்கப்படுகிறத
பெண்கள் அணிக்கு முதல்பரிசாக ரூ12,017, இரண்டாம் பரிசாக ரூ. 9017, மூன்றாம் பரிசாக ரூ.7017, நான்காம் பரிசாக ரூ.5017 வழங்கபடுகிறது. மேலும் கனரா வங்கி சுழற்கோப்பைகளும், சிறந்த ஆட்டக்காரர் பரிசும் வழங்கப்படும்.
ஆண்கள் அணியில் சித்துராஜபுரம், கன்னியாகுமரி, மதுரை, சின்ன தடாகம், சேலம், நெல்லை, கோவில்பட்டி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகாசி, ராஜபாளையம், புதியம்புத்துர், ஒப்பிலான் ஆகிய அணிகள் மோதுகின்றன,
பெண்கள் அணியில் அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி யாதவா கல்லூரி கள்ளந்தரி கிளப், தேனி, சிவகாசி தென்றல் கரூர்,
ஏ.என்.மங்கலம்,, சின்ன தடாகம் , தருவைகுளம். சாயர்புரம்,
களம் கோவில்பட்டி எஸ்.ஏ.சி.நெல்லை,சென்னை அணி, எல்.எஸ்.ஏ சென்னை, தாப்பாத்தி
,எஸ்.வி.சி. சங்கரன்கோவில், சத்திரியா விருதுநகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி ,நாகர்கோவில் அணிகள் பங்கேற்கின்றன.
தொடர்ந்து பதிவுகள் நடைபெற்று வருகின்றன, போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிக்கு நுழைவு கட்டணம் ரூ.2௦௦ வீதம் வசூலிக்கப்படுகிறது. உணவு இலவசமாக வழங்கப்படும்.
மேலும் தகவல்கள் அறிய 9443584334, 9843342241 ஆகிய அலைபேசி நம்பர்களில் தொடர்பு கொள்ளலாம்.