2 கிராமங்களில் கலையரங்கம் கட்டும் பணி; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் கொல்லம்பரம்பு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கலையரங்கம் கட்டப்படுகிறது. இந்த கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்தார்.
மேலும் அந்த பகுதியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரியும் மக்களை சந்தித்து பேசினார். அப்போது மரங்கள் வளர்ப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். .
இதேபோல் ,சதுரகிரி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் செலவில் கலையரங்கம் கட்டுவதற்கான பணிகளையும் ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சந்திரகிரி கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் மக்களிடம் மார்கண்டேயன் எம்.எல்.ஏ., மரங்கள் வளர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் காசி விஸ்வநாதன். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
சின்ன மாரிமுத்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி தளவைராஜா ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
ராதாகிருஷ்ணன், தகவல் தொழில் நுட்ப அணி மணிராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து எப்போதும் வென்றான் கிராமத்தில் நியாய விலைக்கடை கட்டுவதற்கு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணியை தொடக்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய பெருந்தலைவர் ரமேஷ் உலப்ட பலர் கலந்து கொண்டனர்,