அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23-ம் தேதி நடக்கிறது
![அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23-ம் தேதி நடக்கிறது](https://tn96news.com/wp-content/uploads/2022/06/download-1-3.jpg)
.அதி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
அ.தி.முக.. கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்அளில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையேயான கூட்டணியில் தொடர்ந்து விரிசல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)