• May 17, 2024

இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க இந்தியா ஒப்புதல்

 இலங்கையில் நெல் சாகுபடிக்கு 65 ஆயிரம் டன் யூரியா வழங்க  இந்தியா ஒப்புதல்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைக்க புதிதாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதே சமயம் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, எரிபொருள், மருந்து மற்றும் உரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது. இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து பேசினார்.
அப்போது இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா உரம் கொடுத்து உதவுமாறு அப்போது மகிந்த அமரவீரா கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து இந்தியாவின் உரத்துறை உயர் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், யாழ் பருவத்திற்கு தேவையான 65,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஆணையம் அறிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *