• June 7, 2025

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

 அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் தீபாவளியை முன்னிட்டு வேலாயுதபுரம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ,அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் மகேஷ் பாலா தலைமை தாங்கினார், முத்துமாரியப்பன், குமார், இந்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜின்னிஷா பேகம், குழந்தைகள் நல பணியாளர் ஷபீனா ஆகியோர் வரவேற்றனர்.
விழா ஏற்பாடுகளை நகர நிர்வாகிகள் ஜோதிகாமாட்சி, முருகன் செய்திருந்தனர், விழா முடிவில் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *