• April 19, 2024

திரையரங்குகளில் இன்று வெளியான தமிழ் படங்கள்

 திரையரங்குகளில் இன்று வெளியான தமிழ் படங்கள்

திரையரங்குகளில் விக்ரம் படத்துக்கு பிறகு பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக கொண்டு மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 1100 திரையரங்குகளில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள டி-பிளாக் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தில் அருள் நிதியுடன் அவந்திகா, கரு பழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரான் யதான் யோஹனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *