• April 19, 2024

40 அடி பாலத்தில் இருந்து கங்கை நதியில் குதித்த 73 வயது பாட்டியின் துணிச்சல்

 40 அடி பாலத்தில் இருந்து கங்கை நதியில் குதித்த 73 வயது பாட்டியின் துணிச்சல்

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் அமைந்திருக்கும் 40 அடி உயர ஹர்கி பைடி பாலத்திலிருந்து 73 வயது பாட்டி ஒருவர் கங்கைநதியில் குதித்து சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அசோக் பசோயா என்பவர், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வீடியோவில், ஹர்கி பைடி பாலத்திலிருந்து கங்கைநதியில் 73 வயதான ஓம்வதி என்ற பாட்டி எந்தவித பயமின்றி நதியில் துணிச்சலுடன் குதிக்கிறார். பின்னர் அசால்ட்டாக நதியில் நீச்சலடித்து சென்று கரையேறுகிறார். அங்கு கூடியிருக்கும் மக்கள் அதைப் பார்த்து, கத்திக் கூச்சலிட்டு, ஆரவாரம் செய்கின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த வீடியோவுக்கு, “பாட்டிக்கு தில் அதிகம் தான் பா!” என கமென்ட் செய்து அவரைப் பாராட்டி வருகின்றனர் சமூக தளவாசிகள்.
இது குறித்து அந்த பாட்டி கூறுகையில், “நான் சிறுவயதிலிருந்தே நதிகளில் நீந்து வதால் யாரும் என்னை பின் தொடருவதில்லை. என்னை பற்றி யாரும் கவலைப்படமாட்டர்கள்” என்றார்.
கங்கை நதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தபோதிலும், யாருடைய உதவியுமின்றி நதியின் கரையை ஓம்வதி பத்திரமாக அடைந்தார். அவர் ஒரு நீச்சல் வீராங்கனை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *