உயர் மருத்துவ சிகிச்சை: டி.ராஜேந்தர் இன்று இரவு அமெரிக்கா பயணம்
சினிமா டைரக்டரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டி.ராஜேந்தரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து டி.ராஜேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டி.ராஜேந்தரை உயர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை அமெரிக்கா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்தன. விசா நடைமுறைகளும் முடிந்துள்ளன.
இதையடுத்து டி.ராஜேந்தர் சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணி விமானத்தில் அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார். குடும்பத்தினரும் அவருடன் செல்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதித்து டி.ராஜேந்தருக்கு சிகிச்சைகளை தொடர்கிறார்கள்.
இந்த நிலையில், டி.ராஜேந்தரை இன்று பகலில் மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார். மேலும், டி.ராஜேந்தருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த கமல்ஹாசன், நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என்று அவர் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.







