• June 8, 2025

பெண் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

 பெண் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக, கல்லூரி முதல்வர் அப்பாஸ் மாதிரி உத்தரவின் பேரிலும், அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வழிகாட்டலின் படியும் “பெண் குழந்தையைக்காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி துணைமுதல்வர் ஜஹாங்கிர் தலைமை தாங்கினார். பெண்குழந்தைகள் பாதுகாப்பு முறை குறித்தும், பெண்கல்வி கற்பதின் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, சேக் அப்துல்லா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *